கடலில் விழுந்த இந்தோனேஷிய விமானம் - தேடும் பணி தீவிரம்..

கடலில் விழுந்த இந்தோனேஷிய விமானத்தின் கருப்பு பெட்டியை நெருங்கிவிட்டதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

Update: 2018-11-01 06:08 GMT
கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்கால் பினாங் நகருக்கு புறப்பட்ட லயன் ஏர் என்ற விமானம், கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 188 பயணிகளும் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற நிலையில், அவர்களின் உடல்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. விமான நிலைய தகவல் மையத்தில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தால், விபத்துக்கான காரணம் தெரியவரும் என்பதால், அதனை தேடும் பணியில் நூற்றுக்கணக்கான வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில், கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வந்துள்ளதாகவும், விரைவில் அதனை கண்டெடுத்து விடுவோம் என்றும் இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்