இம்ரான்கான் பாகிஸ்தானின் 22 வது பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்

பாகிஸ்தானின் 22 வது பிரதமராக இம்ரான்கான் பதவியேற்று கொண்டதை பற்றி இஸ்லாமாபாத்தில் இருந்து பிபிசி செய்தியாளர் shumaila தந்தி டிவிக்கு அளித்த சிறப்பு பேட்டியை இப்போது பார்ப்போம்.

Update: 2018-08-18 12:51 GMT
இம்ரான்கான் பாகிஸ்தானின் 22 வது பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. பதவியேற்பின் போது இம்ரான்கான் கருப்பு நிற ஷர்வானி அணிந்திருந்தார். வெகு சிறப்பாக நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து சித்து கலந்துகொண்டார். விழாவில் பங்கேற்க இஸ்லாமாபாத்துக்கு நேற்றைய தினமே வந்த சித்து, மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். அதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வாசிம் அக்ரம், ரமஷ் ராஜா உள்ளிட்டோரும், முக்கியமான அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்