நடுரோட்டில் தரையிறங்கிய விமானம் - அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிறிய விமானம் ஒன்று நடுரோட்டில் அவசர அவசரமாக தரையிறங்கியது.

Update: 2018-06-04 02:44 GMT
ஆரஞ்ச் கவுண்டி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானத்தை பெண் ஒருவர் இயக்கியுள்ளார். விமானம் பெரும் சத்தத்துடன் தரையிறங்கும் காட்சிகள் சாலையில் சென்ற வாகனத்தில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. விமானம் தரையிறங்கிய நேரத்தில் சாலையில் எதிரே எந்த வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால், சாலையில் தரையிறக்கியதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்