"உன் பொண்டாட்டி உயிரோட இருக்கமாட்டா".. பயணிகளை மிரட்டிய இளைஞர்கள் - ரயிலில் ரகளை செய்ததால் பரபரப்பு

Update: 2024-05-26 10:33 GMT

சென்னை - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் இளைஞர்கள் சிலர் சத்தமாக பாட்டு பாடியும், புகைபிடித்து கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது பெண் பயணி ஒருவர் புகைபிடிக்க வேண்டாம் என அறிவுறுத்திய நிலையில், இளைஞர்கள் ஆத்திரத்தில் தகாத வார்த்தைகளால் மிரட்டியுள்ளனர். மேலும் அங்கிருந்த ஆண் பயணி ஒருவரையும் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்