வேகமாக அடித்த காற்று... செல்போனில் பேசியவர்.... உடல் கருகி பலி... குடும்பத்தார் தலையில் விழுந்த இடி

Update: 2024-05-23 16:32 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், மின்சார கம்பிகள் உரசியதில், கூலித்தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்திரா நகர் பகுதியை சேர்ந்த நவீன் குமார், மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்த போது, காற்று வீசியதில் வீட்டின் அருகே இருந்த மின்சார கம்பிகள் அவர் மீது உரசியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நவீன்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்