இளைஞரின் ஸ்மார்ட் வாட்ச்சை பறித்துச் சென்ற காவலர் - மேலிடத்தில் விஷயம் தெரிந்ததும் நடந்த சம்பவம்

Update: 2023-11-09 09:06 GMT

இளைஞரின் ஸ்மார்ட் வாட்ச்சை பறித்து சென்ற விவகாரத்தில், ஓட்டேரி காவல்நிலைய காவலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஓட்டேரி செங்கை சிவம் மேம்பாலத்தில், ராயன் என்ற இளைஞர் வீடியோ எடுத்து விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை எச்சரித்த ஓட்டேரி காவல்நிலைய காவலர் விமல், ராயனின் ஸ்மார்ட் வாட்ச்சை வாங்கிக் கொண்டு, போலீஸ் பூத்தில் வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, ராயன் அளித்த புகாரை விசாரித்த புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன், காவலர் விமலை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்