கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் அடுத்த அதிரடி... நேரடியாக களமிறங்க தமிழகம் வரும் புதிய குழு

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் நாளை விசாரணை நடத்த உள்ளனர்.

Update: 2022-07-26 11:26 GMT

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவிக்கு நீதி கேட்ட நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தும் என அதன் தலைவர் பிரியங் கானூங்கோ அறிவித்திருந்தார். அதன்படி, ஆணைய தலைவர் பிரியங் கானூங்கோ மற்றும் ஆணைய உறுப்பினர்கள் இன்று மாலை சென்னை வருகின்றனர். இதன் பின்னர், அவர்கள் நாளை காலை கள்ளக்குறிச்சி சென்று பள்ளியில் நேரடி விசாரணை நடத்த உள்ளனர். அவர்களுடன், மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்களும் கள்ளக்குறிச்சி செல்ல உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்