"அரசு பள்ளியில் படிப்பதை மோசம் என நினைக்க கூடாது" - வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு
அரசுப் பள்ளியில் படிப்பதை மாணவர்கள் மோசம் என நினைக்க கூடாது என வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்...;
"அரசு பள்ளியில் படிப்பதை மோசம் என நினைக்க கூடாது" - வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு
அரசுப் பள்ளியில் படிப்பதை மாணவர்கள் மோசம் என நினைக்க கூடாது என வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் புதியன விரும்பு என்ற பெயரில் மாணவர்களுக்கான கோடை பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. 20 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்து 250 மாணவர்கள் பங்கேற்ற இந்த பயிற்சியின் தொடக்க விழாவை அமைச்சர்கள், அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் ராமசந்திரனும் தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், அரசு பள்ளியில் படிப்பதை மோசம் என நினைக்க கூடாது எனவும், தொழில் படிப்புகளில் வழங்கப்பட்ட 7.5 சதவீத இட ஓதுக்கீடால் பல ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.