கடைசி வரை நிறைவேறாத ஆசை.. கனத்த இதயத்தோடு DK அறிவிப்பு.. கலங்கும் RCB ஃபேன்ஸ்

Update: 2024-05-23 05:25 GMT

பெங்களூரு அணி வீரர் தினேஷ் கார்த்திக், ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவது உறுதியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்ததால், பெங்களூரு அணி தொடரிலிருந்து வெளியேறியது. போட்டி முடிந்தவுடன் பெங்களூரு அணி வீரர்கள் தினேஷ் கார்த்திக்கை கட்டியணைத்து பிரியாவிடை அளித்தனர். தொடர்ந்து தனது கையுறைகளை ரசிகர்களிடம் காண்பித்தபடி நெகிழ்ச்சியுடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார். மைதானத்தில் தினேஷ் கார்த்திக்கின் செயல்கள், ஐபிஎல் தொடரில் இருந்து அவர் ஓய்வுபெறுவதை உறுதி செய்வதாக அமைந்தது. எனினும் தனது ஓய்வு குறித்து தினேஷ் கார்த்திக் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 17 ஆண்டுகளில் 6 அணிகளுக்காக விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக், 257 போட்டிகளில் 4 ஆயிரத்து 842 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்