"ஆக்கிரமிப்பு என்று கூறி; பட்டா வீடுகள் இடிப்பு.." அதிகாரிகள் அட்ராசிட்டி

Update: 2023-08-12 01:53 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே ஆக்கிரமிப்பு என்ற பெயரில் பட்டா நிலத்தில் உள்ள வீடுகளை அதிகாரிகள் இடித்து தள்ளியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

ரிஷிவந்தியம் ஊராட்சியில் வட்டாட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர், காவல் துறையினர் பாதுகாப்புடன் பொதுமக்கள் எதிர்ப்புகளையும் மீறி ஆக்கிரமிப்பை அகற்றியதாக கூறப்படுகிறது. மேலும், ஆக்கிரமிப்புகள் என்ற பெயரில் பட்டா நிலத்தில் உள்ள வீடுகளையும் அதிகாரிகள் இடித்து தள்ளியதாக புகார் எழுந்துள்ளது. எனவே, வட்டாட்சியர், வருவாய்துறை உள்ளிட்ட அதிகாரிகள் மீது, மாவட்ட ஆட்சியர் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையுடன் கூறினர். மேலும், வீடுகளை இழந்து நிற்கும் அப்பாவி மக்களுக்கு, புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கவில்லையெனில், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்