"மலரே நின்னே காணாதிருந்தால்.." - உதகையில் ஒரே நேரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Update: 2024-05-10 13:42 GMT

கோடைக்கால சீசனை முன்னிட்டு உதகையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், அவர்களை மகிழ்விக்கும் வகையில் 126வது மலர் கண்காட்சியை தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சிறப்பம்சமாக, சுமார் 1 லட்சம் மலர்களை கொண்டு 30 அடி உயரம் 40 அடி அகலத்தில் டிஸ்னி வேர்ல்டு செய்து அசத்தியுள்ளனர். இதே போல் கண்ணாடி மாளிகை முன்பு 80 ஆயிரம் மலர்களைக் கொண்டு 33 அடி நீளம், 12 அடி உயரத்தில் உதகை மலை ரயில் குகையை தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். இவற்றுடன், 75 இனங்களில் 388 அகையான 35 ஆயிரம் மலர் தொட்டிகளும் இடம்பெற்றுள்ளன். இந்த மலர்க்கண்காட்சியை காண காலை முதலே வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்