சென்னையில் லிங்க் மூலம் பறிபோன லட்சங்கள்... தெரியாம கூட இந்த தப்பை பண்ணிடாதீங்க மக்களே..!

Update: 2024-05-09 13:21 GMT

சென்னையில் லிங்க் மூலம் பறிபோன லட்சங்கள்... தெரியாம கூட இந்த தப்பை பண்ணிடாதீங்க மக்களே..!

சென்னையை சேர்ந்த இளைஞரிடம் ஆன்லைன் லிங்க் வாயிலாக 2.5 லட்சம் ரூபாய் நூதன மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் சென்னை, அரும்பாக்கத்தை சேர்ந்தவர் 26 வயதான அருண்குமார். கடந்த சில நாட்களாக இவர் வேலை தேடி வந்த நிலையில், இவரது செல்போன் எண்ணுக்கு லிங்க் ஒன்று வந்துள்ளது. அந்த லிங்கில் உள்ள ஒவ்வொரு டாஸ்க்கையும் நிறைவு செய்தால், வேலை உறுதி என கூறப்பட்டிருந்தது. டாஸ்க்கை நிறைவு செய்ய குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. வேலையை வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக 2.5 லட்சம் பணத்தை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார் அருண்குமார். பின்னர் குறிப்பிட்ட எந்த வேலைவாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர், அரும்பாக்கம் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக, செங்குன்றம் பகுதியை சேர்ந்த நல்லம்பட்டி தேஜா, அண்ணாநகர் சாந்தோம் சேர்ந்தகாலனியை சேர்ந்த விஜய், மற்றும் ஹைதராபாத்தை சரஸ்வதி ஆகியோரை போலீஸ் கைது செய்தது. கமிஷனுக்காக வடமாநில கும்பல் ஒன்றுடன் இணைந்து,

மூவரும் மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. மேலும் குற்றவாளிகளிடம் இருந்து, 15 போலி ஏடிஎம் கார்டு, 3 செல்போன், 15 வங்கி பாஸ்புக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய வட மாநில கும்பலை தேடும் பணியை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்