எம்.ஜி.ஆர். சிலையை உடைத்த மர்ம நபர்கள்.. வலைவீசி தேடும் போலீஸ் | Trichy
திருச்சி மாவட்டம் ரெட்டிமாங்குடியில், இரண்டாவது முறையாக எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் சிலை சேதப்படுத்தப்பட்ட நிலையில், அதிமுக நிர்வாகிகள் சிலையை சீரமைத்தனர். இந்நிலையில் மீண்டும் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதால், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்