கவரிங் நகைகளை வைத்து ரூ.2.6 கோடி மோசடி... சென்னைக்கு அருகே அடுத்தடுத்து பரபரப்பு

Update: 2024-05-25 04:51 GMT

காஞ்சிபுரத்தில், உள்ள மூன்று வங்கிகளில் போலி நகைகளை அடமானம் வைத்து சுமார் இரண்டரை கோடி மோசடி செய்த சம்பவத்தில் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுரேந்தர குமார், ராணிப்பேட்டையை சேர்ந்த மேகநாதன், பிரகாஷ் ஆகிய மூவரும் கடந்த சில நாட்களுக்கு முன் காஞ்சிபுரத்தில் உள்ள வெவ்வேறு பொதுத்துறை வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்தனர். இதன் மூலம் இரண்டு கோடியே 62 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டனர். இந்த நிலையில், மண்டல வங்கியின் மேலாளர் ராஜாராமன், அடகு வைக்கப்பட்ட அனைத்தும், தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகாரளித்தார். இதை விசாரித்த போலீஸ் அதிகாரிகள், சுரேந்திர குமார், மேகநாதன், பிரகாஷ் உள்ளிட்ட மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய, ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ், ரவிச்சந்திரன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்துள்ள நிலையில், மோசடிக்கு மூளையாக செயல்பட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்