நேற்று முடிந்த ஃபார்முலா 4 கார் ரேஸ்... அதே இடத்தில் இன்று மாறிய காட்சி
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் முடிந்த நிலையில், பந்தய சாலையில் இருந்த தடுப்புகள் அகற்றும் பணி தொடங்கியுள்ளது.
சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற பார்முலா 4 கார் பந்தய போட்டி முடிவடைந்த நிலையில், பந்தய சாலைக்காக போடப்பட்டிருந்த விளக்குகள் மற்றும் தடுப்புகளை அகற்றும் பணி இன்று தொடங்கியது. இதன் காரணமாக பல்லவன் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சரி செய்து வந்தனர். கிரேன் மூலமாக விளக்குகளை அகற்றும் பணி நடைபெற்று வரும் நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இன்னும் இரண்டு தினங்களுக்குள் சாலையை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர, இன்று இரவு முதல் சீரமைப்பு பணிகளை தீவிரப் படுத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...