சென்னையில் உலாவிய தாய்லாந்து பொருள் , பல்லாவரத்தில் பார்த்ததும் அதிர்ந்த போலீஸ்

Update: 2025-12-17 10:12 GMT

தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று, அங்கிருந்து கஞ்சா வாங்கி வந்து சென்னை சுற்றுவட்டாரத்தில் விற்பனை செய்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை சாலையில் போலீஸார் நடத்திய சோதனையில், தனிநபர் ஒருவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபர் ரெட்கில்ஸ் பகுதியை சேர்ந்த சூர்யா என்பதும், அவரின் நண்பர்களான ராஜ்குமார், தீபக் சுந்தர் ஆகிய மூவரும் சேர்ந்து தாய்லாந்துக்கு சுற்றுலா செல்வது போல் சென்று, அங்கு கஞ்சா பொட்டலங்களை வாங்கி விமானத்தில் சென்னைக்கு பார்சல் அனுப்பியதும் தெரியவந்தது.

சென்னை வந்ததும், கஞ்சாவை 200 கிராம் பொட்டலங்களாக பிரித்து பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 200 கிராம் பதப்படுத்தப்பட்ட கஞ்சா, மற்றும் நான்கு கிலோ கஞ்சா இலைகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்