தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளைப் பொறுத்தவரை 9 ஆயிரத்து 800 எம்பிபிஎஸ், 2 ஆயிரத்து150 பல் மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல்கட்ட கலந்தாய்வு இன்று முதல் வருகிற 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள், தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ தேர்வுக் குழு இணையதளம் மூலம், பொதுப்பிரிவில் வரிசை ஒன்று முதல் 28 ஆயிரத்து 819 வரையில் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள், தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் 28ஆம் தேதி மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், வரும் 30 ஆம் தேதி இறுதியான முடிவு வெளியிடப்படும் என்றும் மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளார். ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள், செப்டம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது...