"ஏப்.19 கட்டாயம் லீவு விடவேண்டும்..." - தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

Update: 2024-04-16 05:06 GMT

#loksabhaelections2024 | #tamilnadu

"ஏப்.19 கட்டாயம் லீவு விடவேண்டும்..." - தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை நாளை மாலை 6 மணிக்குள் முடிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு, வாக்காளர்களுக்கு 92.80 சதவீதம் பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலையுடன் பூத் ஸ்லிப் கொடுக்கும் பணி நிறைவடையும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்கு இன்று கடைசி நாள் எனவும், வாக்குப்பதிவு நாளான 19ஆம் தேதியன்று, விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது புகார் கொடுக்கலாம் என்றும், விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும், 18 ஆம் தேதி மாலைக்குள் அனைத்து வாக்குப்பதிவும் மையத்திற்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி நிறைவடையும் எனவும், நாளை மாலை 6 மணிக்குள் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்