அமைச்சர் பொன்முடி வழக்கில் திடீர் திருப்பம்

Update: 2023-08-30 03:18 GMT

தமிழகத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், வானூர் அருகே செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், எம்.பி.யுமான கவுதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2012-ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தொடர்புடைய சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 4 பேர் மட்டும் ஆஜரானார்கள். அரசு தரப்பில் 67 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், பூத்துறை கிராம உதவியாளர் ரமேஷ், முன்னாள் கிராம உதவியாளர் கோபாலகண்ணன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை முன்னாள் துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அப்போது, வ்வழக்கு சம்பந்தமாக தங்களுக்கு எதுவும் தெரியாது என ரமேஷ், கோபாலகண்ணன் ஆகிய இருவரும் பிறழ் சாட்சியம் அளித்தனர்.இதையடுத்து, வழக்கு விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்