நள்ளிரவில் பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி பெண் - டோலி கட்டி தூக்கிச்சென்ற அவலம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலை வசதி இல்லாத மலைகிராமத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் கர்ப்பிணி பெண்ணை டோலி கட்டி சுமந்து வந்து கிராம மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். நெக்கானமலை கிராமத்தில் நேற்று நள்ளிரவு பிரசவ வலியில் துடித்த பெண்ணை, டோலி கட்டி அப்பகுதி மக்கள் தூக்கிச்சென்றனர். வள்ளிப்பட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்ட அப்பெண்ணுக்கு சிறிது நேரத்தில் குழந்தை பிறந்த நிலையில், இருவரும் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மலைகிராமத்திற்கு சாலை வசதி வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.