குறுக்கே வந்த மாடு; திடீரென பிரேக் போட்ட கண்டெய்னர் லாரி - அடுத்தடுத்து மோதிக் கொண்ட 4 வாகனங்கள்
பூந்தமல்லி அருகே சாலை விபத்தில் கணவர் கண் முன்பே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
பூந்தமல்லி அருகே சாலை விபத்தில் கணவர் கண் முன்பே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் - செல்வி தம்பதி, இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பூந்தமல்லிக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தனர். பாப்பன் சத்திரம் அருகே சென்றபோது, நெடுஞ்சாலையின் குறுக்கே மாடு புகுந்தது. இதனால் காரில் முன்னால் சென்றுக் கொண்டிருந்த கண்டெய்னர் லாரி திடீரென பிரேக் போட்டது. பின்னால் வேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்தை லாரின் பின்பக்கத்தில் மோதியது. அதைத் தொடர்ந்து பின்னால் வந்த 2 கண்டெய்னர் லாரிகளும் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்தில் காரில் வந்த செல்வி பலத்த காயமடைந்தார். மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். பூந்தமல்லி போக்குவரத்து போலீசார், செல்வியின் உடலை மீட்டு விபத்து காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.