வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - வினாடிக்கு 7,232 கனஅடி நீர் வெளியேற்றம்

தொடர் கனமழை காரணமாக வைகை அணை நிரம்பியதை தொடர்ந்து ஏழு மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-26 05:31 GMT
தேனியில் இடைவிடாமல் கனமழை வெளுத்து வாங்குவதால், வைகை அணை முழுக் கொள்ளளவான 70 அடியை எட்டியுள்ளது. அதேசமயம் அணைக்கு வினாடிக்கு 7000 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து 7 ஆயிரத்து 232 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பிரதான மதகுகள், பேபி மதகுகள் வழியாக வெண்ணிறத்தில் தண்ணீர் சீறிபாயந்தோடுகிறது. இதையடுத்து, வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு தேனி மாவட்ட நிர்வாகம் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. வைகை அணை நீர்வரத்தை 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்