முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு - திமுக எம்பிக்கு ஜாமின்

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான திமுக எம்.பி. ரமேஷூக்கு ஜாமீன் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-11-19 14:28 GMT
முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு - திமுக எம்பிக்கு ஜாமின் 

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான திமுக எம்.பி. ரமேஷூக்கு ஜாமீன் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கில் கடலூர் எம்.பி. ரமேஷ் அக்டோபர் 11ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுமீது விசாரணை நடைபெற்று வந்தது.மரணமடைந்த கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் தரப்பில், எம்.பி. ரமேஷுக்கு காவல்துறையினர் சலுகை காட்டுவதாகவும்,விசாரணை முறையாக நடத்தவில்லை என்பதால் சிபிஐ விசாரணை கோரியுள்ளதாகவும், அதனால் ஜாமீன் வழங்க கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரிடம் விசாரிக்க வேண்டி இருப்பதாக, காவல்துறை தரப்பில், தெரிவிக்கப்பட்டது.அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில்,  எம்.பி. ரமேஷுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.சிபிஐ'க்கு மாற்றக்கோரி  மனு மீதான உத்தரவை திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்