நேரடி தேர்வை ரத்து செய்யக்கோரி மதுரை மாணவர்கள் போராட்டம்

மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள், ஆன்லைன் வழியில் தேர்வு நடத்த வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.;

Update: 2021-11-15 08:48 GMT
மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள், ஆன்லைன் வழியில் தேர்வு நடத்த வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஆன்லைன் வழி பாடம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்வுகளும் ஆன்லைனின் நடந்தது. தற்போது, நேரடியாக தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற இருந்த 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, கோரிப்பாளையத்தில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள், கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்