10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு விலக்கு - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
10ஆம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு துணைத் தேர்வுகளை எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.;
மேலும், கொரோனா காரணமாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய ஆணைகள் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.