உண்டியல் பணத்தை எடுக்க வந்த அதிகாரிகள் - அறநிலையத்துறை அதிகாரிகளை சூழ்ந்த மக்கள்

உசிலம்பட்டியில் கோவில் உண்டியல் பணத்தை எடுத்துச்செல்ல வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-04 04:12 GMT
உசிலம்பட்டியில் கோவில் உண்டியல் பணத்தை எடுத்துச்செல்ல வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரியகுறவடி கிராமத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான பத்திரகாளியம்மன் கோவிலில் சாமி கும்பிடுவதில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைத்துறை தன்வசப்படுத்திக் கொண்டது. இச் சூழலில் இரு பிரிவினரும் பகையை மறந்து கடந்த பங்குனி மாதம் எந்த பிரச்சனையுமின்றி திருவிழா கொண்டாடியதாகவும், இந்து சமய அறநிலைத்துறை மீண்டும் கிராம மக்களிடமே கோவிலை ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கோவில் உண்டியலில் சேர்ந்துள்ள பணத்தை எடுக்க வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்