மச்சினியுடன் தகாத தொடர்பு: கண்டித்த மனைவி மீது தாக்குதல் - கணவனை கைது செய்த போலீசார்
சிவகங்கை அருகே தகாத உறவை கண்டித்த மனைவி மீது தாக்குதல் நடத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.;
மானாமதுரையை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரின் மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், மனைவியின் தங்கையோடு மனோஜ்குமாருக்கு தகாத உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை மனைவி நிரோஜா கண்டித்ததால், ஆத்திரமடைந்த மனோஜ்குமார், குக்கர் மூடியால் மனைவியை தாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் மனோஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்