ஆற்றுமணல் கடத்தல் வழக்கு - சிபிசிஐடி-க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு

அம்பாசமுத்திரம் அருகே ஆற்று மணல் கடத்தல் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-07-21 10:23 GMT
ஆற்றுமணல் கடத்தல் வழக்கு - சிபிசிஐடி-க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு 

அம்பாசமுத்திரம் அருகே ஆற்று மணல் கடத்தல் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த கிறிஸ்டி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.மனுவில், அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் கிராமத்தில் எம்-சேண்ட்க்கு அனுமதி பெற்று சட்டவிரோதமாக ஆற்று மணல் கேரளாவுக்கு கடத்தப்படுவதாகவும், காவல்துறையினர் வழக்கை முறையாக விசாரணை நடத்தாததால், வேறு அமைப்பிற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி கொண்ட அமர்வு, பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.அதன்படி, 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆற்றுமணல் சட்டவிரோதமாக திருடப்பட்டுள்ளதாகவும்,மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரிகளுக்கு அனுமதி சீட்டு இல்லாமல் இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.பல்வேறு அரசுத்துறை சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதால், வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றுவதாகவும்,வழக்கு சம்பந்தமான ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் கல்லிடைக்குறிச்சி போலீசார் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.மணல் எடுக்க அனுமதி கொடுத்த இடத்தினை ஆய்வு நடத்த வேண்டும் எனவும் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்