முழு ஊரடங்கு :புகைப்படத் தொழில் பாதிப்பு

ஊரடங்கால் வேலையின்மை காரணமாக, ஆன்லைன் உணவுகளை டெலிவரி செய்யும் பணிக்கு செல்வதாக புகைப்படக் கலைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Update: 2021-06-03 08:21 GMT
ஊரடங்கால் வேலையின்மை காரணமாக, ஆன்லைன் உணவுகளை டெலிவரி செய்யும் பணிக்கு செல்வதாக புகைப்படக் கலைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கோவையில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகைப்படத் தொழிலை நம்பியுள்ளனர். தற்போது திருமண நிகழ்ச்சிகளும் நடைபெறாத காரணத்தால், இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் இது சார்ந்த பிரிண்டிங் லேமினேஷன் உள்ளிட்ட தொழில்களும் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அரசு தங்களின் வாழ்வாதாரம் காக்க உரிய உதவிகளை வழங்க வேண்டும் என புகைப்படக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்