ஊரடங்கால் விற்பனை இல்லை - பலாப்பழ விவசாயிகள் பாதிப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் பலாப்பழம் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2021-05-31 08:40 GMT
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லை பகுதியாக திகழும் கூடலூரில் பழங்கள், வாசனை பொருட்கள் விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. இங்கு விளைவிக்கப்படும் பொருட்களை சாலையில் வைத்து நேரடியாக சுற்றுலா பயணிகளிடம் விற்பனை செய்வது விவசாயிகளின் பிரதான வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், பலப்பழங்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை வரும் பலாப்பழ சீசனான தற்போது விற்பனை செய்யமுடியாததால், விவசாயிகள் பலாப்பழங்களை அறுவடை செய்யாமல் உள்ளனர். இதனால் பழங்கள் மரத்திலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்