"செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்க திட்டம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.;
"செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்க திட்டம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆயுர்வேத கல்லூரியில் ஆய்வு செய்த அவர், ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பேசிய மா.சுப்பிரமணியன், செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டால், மற்ற மாநிலங்களுக்கு இங்கிருந்து கொரோனா தடுப்பூசிகளை விநியோகம் செய்யலாம் என்று குறிப்பிட்டார்.