பதற்றமான வாக்குச்சாவடிகள் அதிகரிக்கலாம்" - சத்யபிரதா சாகு தகவல்

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.;

Update: 2021-03-25 13:20 GMT
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மொத்தம் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதில் ஆண் வேட்பாளர்கள், 3 ஆயிரத்து 585, பெண் வேட்பாளர்கள் 411 பேர் போட்டியிடுகின்றனர்.மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேர் போட்டியிடுகின்றனர்.மேலும், புதிய வாக்காளர் அடையாள அட்டை வரும் 30ஆம் தேதிக்குள் வாக்காளர்களிடம் சென்று சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வீடுகளுக்கே சென்று தபால் ஓட்டு பதிவு செய்யும் பணியில், ஒரு தேர்தல் அலுவலர், ஒரு காவலர் மற்றும் வீடியோ பதிவாளர் உடனிருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம், 88 ஆயிரத்து 937 வாக்கு சாவடிகள் இருப்பதாகவும்,அதில், 300 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் எனவும் 10 ஆயிரத்து 528 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்றும் சத்யபிரதா சாகு கூறியுள்ளார். பதற்றமான வாக்குச்சாவடிகள் மேலும், அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.44 ஆயிரத்து 759 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்