எய்ம்ஸ் நிர்வாக குழு - ஸ்டாலின் கடும் கண்டனம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த சுப்பையா சண்முகத்தின் நியமனத்திற்கு தனது டுவிட்டர் பக்கத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.;
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில், ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த சுப்பையா சண்முகத்தின் நியமனத்திற்கு, தனது டுவிட்டர் பக்கத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனது பதிவில், பெண் இனத்தை அவமதித்த ஏபிவிபி நபருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் இடமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சுப்பையா சண்முகத்தை நீக்கிவிட்டு, தென்மாவட்ட எம்.பி.க்களை சேர்க்க பிரதமருக்கு தமிழக முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.