மனைவிக்கு காவலருடன் தொடர்பு - மனமுடைந்த கணவன் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சி

கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினையால் புகார் அளிக்க வந்த பெண்ணை தன் வசப்படுத்தி புது உறவை ஏற்படுத்திக் கொண்ட காவலர் ஒருவர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2020-07-24 12:35 GMT
ஒசூர் அருகே உள்ள தேவகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி அனிதா. திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். மஞ்சுநாத்துக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத மனைவி அனிதா, தளி காவல் நிலையத்தில் கடந்த 11 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். அப்போது அங்கிருந்த போலீசார் கணவன், மனைவி இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சினை என போலீஸ் ஸ்டேஷனுக்கு போன அனிதாவிற்கு அப்போது தான் மீண்டும் ஒரு பிரச்சினை உருவானது. 

தளி காவல் நிலையத்தில் காவலராக இருந்த ஷ்யாம் குரு, அனிதாவின் மீது தன் கவனத்தை திருப்பி இருக்கிறார். அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசவே, ஏற்கனவே கணவனால் மனமுடைந்த பெண்ணுக்கு காவலர் ஷ்யாம் குருவின் நேசம் பிடித்துப் போக அது காதலாக மலர்ந்தது. இருவரும் நெருங்கிப் பழகுவதை பார்த்த மஞ்சுநாத் கோபத்தின் உச்சிக்கு சென்றார். பலமுறை எச்சரித்தும் தன் மனைவி காவலருடனான தகாத உறவை துண்டிக்க மறுத்ததால் பிரச்சினை பூதாகரமானது. ஒரு கட்டத்தில் மனமுடைந்த மஞ்சுநாத், மது அருந்திவிட்டு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரை மீட்ட மக்கள், மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது போலீசார் விசாரித்த போதுதான், காவலர் ஷ்யாம்குரு - அனிதா விவகாரம் தெரியவந்தது. இந்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரியவரவே, காவலர் ஷ்யாம் குருவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். புகார் அளிக்க வந்த பெண்ணிடம் காவலர் அத்துமீறி தொடர்ந்த உறவு இன்று அவரின் வேலைக்கே ஆபத்தை உண்டாக்கியிருக்கிறது... 

Tags:    

மேலும் செய்திகள்