தங்கம் விலை தொடர்ந்து உயர்வு - ஒரு சவரன் தங்கம் ரூ.38,776க்கு விற்பனை

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 592 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 776க்கு விற்பனையாகிறது.

Update: 2020-07-23 11:22 GMT
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 74  ரூபாய் உயர்ந்து   4847 ரூபாய்க்கு விற்பனையாகிறது. காலையில் 42 ரூபாயும், மதிய நிலவரப்படி 32 ரூபாய் என மொத்தம் 74 ரூபாய் உயர்ந்தது. அதன்படி சவரனுக்கு 592 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 38 ஆயிரத்து 776 ரூபாயாக உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்