தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : ஒருவர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டம் தொடர்பான வழக்கில் சுரேஷ் என்பவர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.;

Update: 2020-07-07 12:36 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டம் தொடர்பான வழக்கில் சுரேஷ் என்பவர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மனுதாரர் 20 வயது நிரம்பியவராக இருப்பினும் மன வளர்ச்சி என்பது 11 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனை நீதிமன்றமும் உறுதி செய்துள்ளதால் சுரேஷ் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்