கொரோனாவால் பலி - தகனம் செய்வதை தடுக்க வேண்டாம்" - சென்னை மாநகராட்சி விளக்கம்

கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.;

Update: 2020-04-21 04:05 GMT
 உடல்களை தகனம் அல்லது அடக்கம் செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாகவும், அரசு வழிகாட்டுதலின்படி உடல்களை கவனமாக தகனம் செய்ய விதிமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் சடலத்திலிருந்து நோய் பரவாது என்பதால் அச்சமும், கவலையும் தேவையில்லை என்றும் சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்