வரும் 29-ம் தேதி இந்து ஆன்மீக கண்காட்சி - ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பேரணி

11வது ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடக்க உள்ளது.;

Update: 2020-01-25 05:25 GMT
11வது ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, வியாசர்பாடியில் உள்ள விவேகானந்தா பள்ளி சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சுவாமி விவேகானந்தரின் உடை அணிந்து நடைபயணம் மேற்கொண்டனர். சுற்றுச்சூழலை பராமரித்தல், பெண்மையை போற்றுதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்