பெயர் மாற்றி வெற்றி அறிவிக்கப்பட்ட விவகாரம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கடலூர் அருகே பெயர் மாற்றி வெற்றி அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வேட்பாளரின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2020-01-04 02:46 GMT
குமளங்குளம் ஊராட்சி தலைவர் பதவிக்கு ஜெயலட்சுமி, விஜயலட்சுமி ஆகிய இருவர் போட்டியிட்டனர். இதில் ஜெயலட்சுமி சுமார் ஆயிரத்து 200 வாக்குகள் கூடுதல் பெற்றிருந்தார். ஆனால் துணை தேர்தல் அதிகாரி ஜெயலட்சுமிக்கு பதில் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக தவறுதலாக குறிப்பிட்டு விட்டதாக கூறப்படுகிறது.  அவருக்கு சான்றிதழும் அளிக்கப்பட்டது. இதனை கண்டித்து ஜெயலட்சுமி ஆதரவாளர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  மாவட்ட வருவாய் அதிகாரி கூறியதை தொடர்ந்து 3 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்