இரு சக்கர வாகனத்தில் அரசு பேருந்து மோதி விபத்து : பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி
சென்னை அண்ணாசாலையில், இரு சக்கர வாகனத்தில் அரசு பேருந்து மோதியதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.;
சென்னை அண்ணாசாலையில், இரு சக்கர வாகனத்தில் அரசு பேருந்து மோதியதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் விபத்தின் போது பதிவான காட்சிகளை வெளியிட்ட, அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.