நாகையில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கடல் சீற்றம் காரணமாக, நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Update: 2019-12-19 11:46 GMT
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால், நாகையில் கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது. துறைமுகம் பகுதியில் கருங்கல் தடுப்பு சுவர்களை தாண்டி அலைகள் ஆர்ப்பரித்து எழுகிறது. தொடர்ந்து நான்காவது நாளாக சூறைக் காற்றும், கடல் கொந்தளிப்பும் அதிகரித்து வருவதால், நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர், தரங்கம்பாடி, பழையார் உள்ளிட்ட 54 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், இன்று கடலுக்கு செல்லவில்லை.  4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்