"சென்னையில் தரமற்ற தண்ணீர் வினியோகம்" - மத்திய அரசின் ஆய்வில் தகவல்
சென்னையில் குழாய் மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீர் தரமற்றது என்று மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.;
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீரின் தரம் குறித்த 2வது கட்ட ஆய்வை மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தர அமைப்பு நடத்தியது.
அதில், சென்னை, பெங்களூரு, சண்டிகர், கவுகாத்தி, காந்திநகர், லக்னோ, ஜம்மு, ஜெய்ப்பூர், டெராடூன், மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் சேகரிக்கப்பட்ட குழாய் தண்ணீர் தரமாக இல்லை என்று தெரிய வந்துள்ளது.சென்னையில் சேகரிக்கப்பட்ட குழாய் தண்ணீர் 10 மாதிரிகளும்
களங்கலாகவும், துர்நாற்றத்துடனும், கடினத்தன்மையோடும் இருந்ததாக நுகர்வோர் நலத்துறை தெரிவித்துள்ளது.முன்னதாக நடைபெற்ற முதல்கட்ட ஆய்வில் டெல்லியில் சேகரிக்கப்பட்ட 11 மாதிரிகளும் தரத்துடன் இல்லை எனவும், அவை குடிப்பதற்கு தகுதி இல்லாதவை என்றும் தெரியவந்துள்ளது.