சற்று குறைந்த காற்று மாசு : தர மதிப்பீட்டில் 28 புள்ளி குறைந்ததாக தகவல்

சென்னையில் நிலவிவந்த காற்றின் மாசு தர மதிப்பீட்டில் அதிக பட்சம் 262 என்ற அளவில் இருந்து 234 ஆக குறைந்துள்ளது.;

Update: 2019-11-11 04:20 GMT
சென்னையில் நிலவிவந்த காற்று மாசு சற்று குறைந்தாலும், அடர் புகைமூட்டதால் மக்கள் அவதியுறுகின்றனர். கடந்த ஏழு நாட்களாக சென்னையில் காற்று மாசு மோசமாக இருந்ததது. காற்றின் மாசு தர மதிப்பீட்டில் அதிக பட்சம் 262 என்ற அளவில் இருந்து 234 ஆக குறைந்துள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடுகைளில், 28 புள்ளிகள் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. காற்றின் வேகம் அதிகரிக்கும் பட்சத்தில், படிப்படியாக அடர் புகைமூட்டம் குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்