கல்வெட்டுகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?- உயர் நீதிமன்றம் கேள்வி

கல்வெட்டுகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? - தொல்லியல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு;

Update: 2019-09-25 11:39 GMT
தமிழக  கல்வெட்டு படிமங்களை பாதுகாக்க எடுத்துள்ள நடவடிக்கை குறித்து மத்திய தொல்லியல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மைசூரில் பாதுகாக்கப்பட்டு வரும் தமிழ் கல்வெட்டு படிமங்களை தமிழகத்துக்கு  மாற்ற  தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள்  சிவஞானம்,  தாரணி அமர்வு,  தமிழக  கல்வெட்டு படிமங்களை பாதுகாக்கவும், படிக்கவும், அவற்றை பதிப்பிக்கவும் எடுத்துள்ள  நடவடிக்கை குறித்து மத்திய தொல்லியல் துறை பதில்  அளிக்க  உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்