உயர்மின்கோபுரம் அமைக்கும் பணி தீவிரம் : நிலத்தை அளக்க உரிமையாளர் எதிர்ப்பு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உயர் மின்கோபுரம் அமைக்கும் பணியை தடுக்க முயன்ற மூதாட்டி மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update: 2019-08-02 11:40 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உயர் மின்கோபுரம் அமைக்கும் பணியை தடுக்க முயன்ற மூதாட்டி மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புகளுர் முதல் திருவளம் செல்லும் வழியில்,  உயர் மின் கோபுரம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது நிலத்தின் உரிமையாளரான மூதாட்டி ஒருவர், பணிகளை தடுக்க முயன்று மயங்கி விழுந்தார். பின்னர், காங்கேயம் வட்டாட்சியர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகியோரின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து, இடம் அளக்க ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது. மேலும் இழப்பீடு வழங்கப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்