திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மாலை 3 மணிக்கு மேல் மருத்துவர்கள் இல்லை - அரசு மருத்துவமனை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஆண் குழந்தைக்கு 5 ஆயிரம் ரூபாய், பெண் குழந்தைக்கு 2 ஆயிரம் ரூபாய் என அடாவடி வசூல் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2019-07-12 19:57 GMT
திருமங்கலத்தை சுற்றியுள்ள, கள்ளிக்குடி கல்லுப்பட்டி ,பேரையூர் உள்ளிட்ட பல கிராம மக்கள், திருமங்கலம் அரசு மருத்துவமனையை நம்பியே உள்ளனர். தினம் தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் இந்த மருத்துவமனையில், மாலை 3 மணிக்கு மேல் மருத்துவர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாள்களாக உள்ளது. இது தவிர, டயாலிசிஸ் இயந்திரம் அமைக்கப்பட்டும், பணயாளர் நியமிக்கப்படவில்லை, அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் இல்லை,  ஸ்கேன் செய்யும் கருவிகள் இல்லை, இ.சி.ஜி. இயந்திரம் பழுது, சுகாதார பணியாளர் பற்றக்குறை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போது, மேலும் ஒரு பகிரங்க குற்றச்சாட்டாக, இந்த மருத்துவமனையில் பிறக்கும் ஆண் குழந்தைக்கு 5 ஆயிரம் ரூபாயும், பெண் குழந்தைக்கு 2 ஆயிரம் ரூபாயும் லஞ்சமாக பெறப்படுவதாக கர்ப்பிணி பெண்கள் தெரிவிக்கின்றனர்.இத்தனை குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் திருமங்கலம் அரசு மருத்துவமனை மீது, அரசு தனி கவனம் செலுத்திட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்