கிரிக்கெட் விளையாட்டால் ஏற்பட்ட முன்விரோதம் - இரட்டை கொலையில் இருவர் சரண்
நாகர்கோவில் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் சரண்டைந்த இருவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.;
நாகர்கோவில் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் சரண்டைந்த இருவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.தென்தாமரைக்குளத்தை சேர்ந்த அஜித்குமார் மற்றும் அர்ஜூன் ஆகிய இருவரை, 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இந்த வழக்கு தொடர்பாக ரமேஷ் மற்றும் சுந்தர் ஆகிய இருவர் தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், கிரிக்கெட் விளையாட்டின்போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றிருப்பது தெரியவந்தது.