பாடகி சுதா ரகுநாதனின் மகளுக்கு வரும் 11 ஆம் தேதி திருமணம் - முதலமைச்சரை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார் சுதா ரகுநாதன்

பாடகி சுதா ரகுநாதனின் மகளுக்கு வரும் 11ஆம் தேதி திருமணம் நடக்க உள்ள நிலையில் முதலமைச்சர் பழனிசாமியை அவர் இன்று நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்.

Update: 2019-07-03 12:30 GMT
பாடகி சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா வெளிநாட்டில் படித்தபோது அங்குள்ள மைக்கேல் முர்பி என்பவரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் ஒப்புதல் அளித்த நிலையில் வரும் 11ஆம் தேதி சென்னையில் திருமணம் நடக்க உள்ளது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமை செயலகத்தில் சந்தித்த சுதா ரகுநாதன், தனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்