தமிழகத்தில் 24 பொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்தி கொள்ள கட்டண நிர்ணய குழு அனுமதி?

தமிழகத்தில் 24 முன்னணி பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்தி கொள்ள கட்டண நிர்ணய குழு அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Update: 2019-06-29 12:23 GMT
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பொறியியல் கல்லூரிகளின்  கல்வி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன . அந்த வகையில் அடுத்த கல்வியாண்டில் அனைத்து கல்லூரிகளுக்கும் புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படவுள்ளது.இந்நிலையில் செலவுகளை காரணம் காட்டி கல்வி கட்டணத்தை உயர்த்தி கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என 24 முன்னணி பொறியியல் கல்லூரிகள் கட்டண நிர்ணயக்குழுவிடம் விண்ணபித்துள்ளன. இதனையடுத்து
கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 87 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக  உயர்த்தி கொள்ள அந்த கல்லூரிகளுக்கு கட்டண நிர்ணய குழு  அனுமதி வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்