"ஜூன் 23-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்"

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-05-29 02:31 GMT
சென்னை சத்யா ஸ்டுடியோவில் ஜூன் 23ந்தேதி  நடைபெறும் இந்த தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தேர்தல் அலுவலரான ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு தலைவர் பதவி, 2 உப தலைவர்கள், பொது செயலாளர். பொருளாளர் மற்றும் 24 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்க​ள்​அதற்கான முன்வைப்பு தொகையினை செலுத்த வேண்டும் எனவும் 

போட்டியிட விரும்புவர்கள் தொடர்ந்து சங்கத்திற்கு 7 ஆண்டுகள் சந்தா செலுத்தி இருக்க வேண்டும் எனவும் தவறினால் வேட்புமனு நிராகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் ஜூன் 8ம் தேதி முதல் 10ந் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் எனவும் வேட்பு மனுக்கள் ஜூன் 11ந்தேதி பரிசீலிக்கப்பட்டு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் 14 ந்தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் நாசர், விஷால், கார்த்தி ஆகியோரின் பதவி காலம் கடந்த அக்டோபர் மாதமே முடிவடைந்த நிலையில், நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடியாததால், ஆறு மாத காலம் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்